cl0q

unifiedwisdom.guru

Unified Wisdom - முழுமையறிவு

திப்பீடுகளின் கூட்டிசை(Symphony of Values) என்று நித்ய சைதன்ய யதி முன்வைத்த கொள்கையே இதன் ஆதாரம். அறிவியல், கலைகள், இலக்கியம், தத்துவம், ஆன்மிகம் ஆகிய அனைத்து அறிவுகளையும் ஒன்றுடனொன்று இணைத்துக் கற்றுக்கொள்வது இதன் வழிமுறை. அனைத்தையும் ஒன்றாக உணரும் ஒரு மெய்நிலையை அடைவது இதன் நோக்கம். இதன் அடிப்படையில் நவீன இலக்கியம், மேலைத்தத்துவம், இந்திய தத்துவம், சைவ இலக்கியம், வைணவ இலக்கியம், சைவசித்தாந்தம், பௌத்த தத்துவம், சமண தத்துவம், கிறிஸ்தவ தத்துவம், இஸ்லாமிய தத்துவம், இந்திய ஆலயக்கலை, இந்தியச் சிற்பக்கலை, மேலைநாட்டு ஓவியக்கலை, மேலைநாட்டு இசை, நவீன மருத்துவம், ஆயுர்வேதம், பறவைகளை அறிதல், தாவரங்களை அறிதல் என அனைத்துத் துறைகளிலும் உரிய ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. கல்விக்கு இன்றியமையாத கவனக்குவிப்பு, உளக்கூர்மை ஆகியவற்றை அளிக்கும் தியானம், யோகம் ஆகிய பயிற்சிகளும் இங்கே அளிக்கப்படுகின்றன

Status200 OK — live & indexed by cl0q
First seen2026-07-04
Last crawled2026-07-04
IPv4104.21.73.87
IPv62606:4700:3036::6815:4957
NetworkAS13335 Cloudflare, Inc. · United States
Mail (MX)route3.mx.cloudflare.net,route1.mx.cloudflare.net,route2.mx.cloudflare.net
Languageta-IN
Servercloudflare